நண்பர்கள் பந்தயம் கட்டியதால் கேளிக்கைப் பூங்காவிற்கு 44 கி.மீ. நடந்த மாணவர்கள்

நண்பர்கள் பந்தயம் கட்டியதால் கேளிக்கைப் பூங்காவிற்கு 44 கி.மீ. நடந்த மாணவர்கள்

1 mins read
bf05999c-0a31-4034-8e3e-2ba89c0cb608
-

சோல்: 'எவர்­லாண்டு' கேளிக்­கைப் பூங்­கா­வுக்கு இரவு முழு­வதும் 11 மணி நேரம் நடந்த நடு­நி­லைப் பள்ளி மாண­வர்­கள் இரு­வ­ரின் கதை, அண்­மை­யில் சமூக ஊட­கங்­களில் பகிர்ந்­து­கொள்­ளப்­பட்­ட­தை­ய­டுத்து அது பர­வ­லா­னது.

அந்­தக் கடி­ன­மான பய­ணத்­திற்­குக் கார­ணம்? 70,000 வோன் ($71) வெகு­ம­திக்­குத் தங்­கள் நண்­பர்­கள் பந்­த­யம் கட்­டி­யி­ருந்­ததே.

மே 12ஆம் தேதி, கியோங்கி மாநி­லத்­தின் யொங்­கின் பகு­தி­யில் அந்த இரண்டு பதின்­ம­வ­யது சிறு­வர்­களும் உலா­விக்­கொண்­டு இருந்­ததை அங்­குள்ள குடி­யி­ருப்­பாளர்­கள் கண்­ட­தாக, சமூக ஊட­கங்­களில் வெளி­யான பதிவு ஒன்­றில் தெரி­ய­வந்­தது.

தென்­கொ­ரி­யா­வில் ஆகப் பெரிய, ஆகப் பிர­ப­ல­மான கேளிக்­கைப் பூங்­கா­வான 'எவர்­லாண்டை' சென்­ற­டைய, இரவு முழு­வ­தும் 44 கிலோ­மீட்­டர் தூரம் நடந்­த­தாக அவர்­கள் கூறி­னர். தாங்­கள் காணா­மல்­போ­ன­தா­க­வும் சரி­யான பாதை தேவைப்­பட்­ட­தா­க­வும் அவர்­கள் சொன்­னார்­கள்.

குடி­யி­ருப்­பா­ளர்­களில் ஒரு­வர், அவர்­க­ளைத் தமது வீட்­டிற்கு அழைத்­துச்­சென்று, உணவு கொடுத்து, வாக­னத்­தில் கொண்டு­சென்­று­விட முன்­வந்­தார்.

ஆனால், அதனை நிரா­க­ரித்த அந்­தச் சிறு­வர்­கள், 'எவர்­லாண்டு'க்கு நடந்­து­சென்­றால் மட்­டுமே தங்­கள் நண்­பர்­கள் தங்­க­ளுக்கு 70,000 வோன் கொடுக்க உறு­தி­கூ­றி­ய­தா­கத் தெரி­வித்­த­னர்.

அந்­தப் பணம் அவர்­க­ள்­ இடையே பிரிக்­கப்­ப­டுமா அல்­லது அவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் 70,000 வோன் கிடைக்­குமா என்­பது தெளி­வா­கத் தெரி­ய­வில்லை.

அந்­தக் குடி­யி­ருப்­பா­ளர் அவர்­க­ளைக் கடு­மை­யா­கத் திட்டி, தங்­கள் பெற்­றோ­ரை­யும் ஆசி­ரி­யர்­க­ளை­யும் அழைக்­கு­மாறு கூறி­னார். இருப்­பி­னும், அந்தச் சிறு­வர்­கள் சரி­யான வழி­யில் நடந்­த­வாறே, 'எவர்­லாண்டு'க்கு தங்­கள் பய­ணத்­தைத் தொடர்ந்­த­னர்.