கனடியப் பிரதமர் நின்ற விதம் குறித்து மாறுபட்ட கருத்துகள்

1 mins read
92428429-7d60-4112-a848-e2ae6c56a655
-

சோல்: தென்­கொ­ரி­யா­வில் அர­சியல் பிர­மு­கர் ஒரு­வ­ரு­டன் கன­டி­யப் பிர­த­மர் ஜஸ்­டின் ட்ரூடோ முகம் காட்­டிய புகைப்­ப­டம் ஒன்று தென்­கொ­ரி­யா­வில் தலைப்­புச் செய்­தி­யா­னது.

ஜப்­பா­னின் ஹிரோ­ஷிமா நக­ரில் ஜி7 உச்­ச­நிலை மாநாட்­டிற்கு முன்­ன­தாக, இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான அர­ச­தந்­திர உறவு­களின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்­டா­டு­வ­தற்­காக திரு ட்ரூ­டோ­வும் கனடிய அமைச்­சர்­கள் சில­ரும் தென்­கொரி­யா­விற்கு சென்­று இ­ருந்­த­னர்.

தென்கொரிய நாடாளுமன்­றத்­தில் உரை­யாற்­று­வ­தற்கு முன்­னர், சபா­நா­ய­கர் கிம் ஜின் பியோ உள்­ளிட்ட தென்­கொ­ரிய அர­சி­யல்­வா­தி­க­ளு­டன் திரு ட்ரூடோ புகைப்­ப­டங்­களுக்கு முகம் காட்­டி­னார்.

சபா­நா­ய­கர் கிம் உய­ரத்­திற்கு இறங்க தமது கால்­கள் இரண்­டை­யும் விரித்து நின்­றார் திரு ட்ரூடோ.

இப்­படி நிற்­பதை தென்­கொ­ரி­யா­வில் 'மேனர் லெக்ஸ்' எனக் கூறப்­ப­டு­கிறது.

அதா­வது, இரு­வரி­டையே உய­ரத்தை சமன் செய்­வதை இது குறிக்­கிறது.

திரு ட்ரூ­டோ­வின் இந்­தச் செயலை தென்­கொ­ரிய ஊட­கங்­கள் பெரு­மை­யா­கக் கரு­து­கின்­றன.

இது அக்­கறை கொண்ட குணத்தை வெளிக்­காட்­டு­வதாக தென்­கொ­ரிய ஊட­கங்­கள் புக­ழாரம் சூட்­டி­யுள்­ளன. ஆனால், கன­டா­விலோ இதற்கு கடும் விமர்­சனம் எழுந்­துள்­ளது.

திரு ட்ரூடோ வெளி­நாட்­டில் இருக்­கும்­போது கன­டா­வுக்கு வழக்கம்­போல் தலை­க்கு­னிவை ஏற்­ப­டுத்­தி­விட்­டார் என விமர்­சிக்­கப்­பட்­டு உள்­ளார்.