ஜெட்டா: உக்ரேன்மீது ரஷ்யாவின் படையெடுப்பை அரபு நாட்டுத் தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். சவூதி அரேபியாவில் நடைபெற்ற அரபு லீக் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்ற அவர், நேற்று முன்தினம் ஆற்றிய உரையில் இதனைக் கூறினார். அரபு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றிய திரு ஸெலென்ஸ்கி, "உலகிலும் இங்குள்ள உங்களில் சிலரும் ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டுகொள்ளவில்லை," என்று வெளிப்படையாகக் கூறினார். உக்ரேன்-ரஷ்யா போரால் ஏற்பட்டுள்ள மோசமான விளைவுகளைக் கவனிக்குமாறு அவர்களிடம் திரு ஸெலென்ஸ்கி வலியுறுத்தினார்.
'ரஷ்யா-உக்ரேன் போரை சிலர் கண்டுகொள்ளவே இல்லை'
1 mins read
-

