நாய்க்குத் தீ மூட்டிய இளையருக்குப் பிரம்படி கிடையாது

நாய்க்குத் தீ மூட்டிய இளையருக்குப் பிரம்படி கிடையாது

1 mins read
c810ce4f-199f-4aeb-9461-0d4fe1f6fb8f
குற்றத்தை ஒப்புக்கொண்ட 18 வயது பிரேடன் யாப். படம்: தி ஸ்டார் -

ஜோகூர் பாரு: நாய்க்குத் தீ வைத்த குற்றத்தை ஒப்புக்கொண்ட இளையருக்கு பிரம்படி கொடுக்கவேண்டும் என்ற தீர்ப்பை ஜோகூர் பாரு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட 18 வயது பிரேடன் யாப் எனும் இளையருக்கு இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் தேதியன்று ஏழு முறை இலேசான பிரம்படிகள் கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமையன்று (21 மே) அந்தத் தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டது.

மார்ச் மாதம் 27ஆம் தேதி அதிகாலை 1.49 மணியளவில் யாப், நாய்க்குத் தீ மூட்டினார்.