மலேசியாவில் வாகனம் மோதி உயிரிழந்த கறுஞ்சிறுத்தை

மலேசியாவில் வாகனம் மோதி உயிரிழந்த கறுஞ்சிறுத்தை

1 mins read
09b5013a-0765-4770-a96e-d7ee85e09834
சிம்பாங் பர்த்தாங் நகரில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. படம்: ஜபாட்டான் நெட்டிஸென் மலேசியா / டுவிட்டர் -

சிம்பாங் பர்த்தாங்: மலேசியாவில் சாலையில் வாகனம் மோதி கறுஞ்சிறுத்தை ஒன்று மாண்டது.

இச்சம்பவம் சிம்பாங் பர்த்தாங் நகரில் நிகழ்ந்தது.

வாகனத்தை 38 வயது ஆடவர் ஒருவர் ஓட்டியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஓட்டுநர் தனது குடும்பத்தாருடன் வாகனத்தில் சென்றுகொண்டிருந்ததாக பெர்னாமா செய்தி நிறுவனம் கூறியது.

40 கிலோகிராம் எடைகொண்ட கறுஞ்சிறுத்தை திடீரென சாலையின் வலது புறத்திலிருந்து வந்ததாகவும் ஓட்டுநரால் விபத்தைத் தவிர்க்க முடியாததாகவும் காவல்துறை தெரிவித்தது.

உலகிலேயே மலேசியாவில்தான் ஆக அதிக எண்ணிக்கையில் கறுஞ்சிறுத்தைகள் உள்ளன.