தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுவிட்சர்லாந்தில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்; பலர் மரணம்

1 mins read
426e43a1-8999-43fe-8a9a-b8b3bfc231d6
-

ஜெனீவா: சுவிட்சர்லாந்தின் மலைப்பகுதி ஒன்றில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது.

பலர் மாண்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

தென் சுவிட்சர்லாந்தின் நியூக்கட்டெல் நகரில் இருக்கும் பொன்ட்ஸ்-டி-மார்ட்டெல் பகுதிக்கு அருகே விமானம் விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை (20 மே) காலை 10.20 மணியளவில் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

பலர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

விபத்தில் சிக்கியோரின் குடும்பத்தாருக்குத் தகவல் தெரியப்படுத்தும் வரை மேல்விவரங்கள் வழங்கப்படாது என்று காவல்துறையினர் கூறினர்.