'பாக்முட் நகரை ரஷ்யா கைப்பற்றியதாக ஸெலென்ஸ்கி உறுதிப்படுத்தவில்லை'

1 mins read
544bdf9b-c71e-46dd-9c6d-fbae591b6cd3
டாங்கியில் பாக்முட் நகரை நோக்சிச் செல்லும் உக்ரேனியப் படையினர். படம்: ஏஎஃப்பி -

கியவ்: பாக்முட் நகரை தன்வசம் கொண்டுவர உக்ரேன் இன்னும் போராடி வருவதாக கியவ் கூறியுள்ளது.

பாக்முட் 'எங்களின் இதயங்களில் மட்டும்தான் இருக்கிறது' என்று உக்ரேனிய அதிபர் வொலொடமிர் ஸெலென்ஸ்கி முன்னதாகக் கூறியிருந்தார்.

எனினும், தம்மிடம் கேட்கப்பட்ட கேள்வியின் வேறொரு பகுதிக்குத் திரு ஸெலென்ஸ்கி பதிலளித்தாக அவரின் ஊடகத் தொடர்புச் செயலாளர் சொன்னார்.

அவரின் பதில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், கிழக்கு உக்ரேனில் உள்ள பாக்முட் நகரைத் தங்கள்வசம் கொண்டுவந்து விட்டதாக ரஷ்யா சனிக்கிழமையன்று (20 மே) சொன்னது.

அங்கு ரஷ்யா வெற்றிகண்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாடமிர் புட்டினும் கூறியிருக்கிறார்.