தீமோர் லெஸ்டேயில் வாக்குப் பதிவு

தீமோர் லெஸ்டேயில் வாக்குப் பதிவு

1 mins read
cf0c728d-1cc6-4d54-bc1b-15f35528616f
-

ஜகார்த்தா: திமோர் லெஸ்டே வாக்­கா­ளர்­கள் நேற்று நடை­பெற்ற நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் வாக்­க­ளித்­துள்ளனர்.

பல ஆண்­டு­க­ளாக இந்­தோ­னீ­சி­யா­ ஆக்­கி­ர­மிப்­பின் கீழ் இருந்த தீமோர் லெஸ்டே 2002ஆம் ஆண்­டில் சுதந்திரமடைந்தது.

அதன் பிறகு 5வது முறை­யாக அங்கு நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நடை­பெ­று­கிறது. 2018ஆம் ஆண்­டி­லி­ருந்து பிர­த­ம­ராக இருக்­கும் திரு ஜோஸ் மரியா வாஸ்­கோன்­செ­லோசை, புரட்சி முன்­னணி தலை­மை­யி­லான நான்கு கட்சி கூட்­டணி ஆத­ரிக்­கிறது. இவர் மீண்­டும் பிர­த­ம­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வது சந்­தே­கம் என்று கணிப்­பு­கள் தெரி­விக்­கின்­றன.

இத்­தேர்­த­லில் 17 கட்­சி­கள் எதிர்த்­துப் போட்­டி­யி­டு­கின்­றன.

ஆனால் சுதந்­திர நாய­க­னான ஸனானா குஸ்­மாவோ தலை­மை­யி­லான திமோரி மறு­சீ­ர­மைப்பு தேசிய காங்­கி­ர­சுக்­கும் மாரி அல்­கா­டிரி தலை­மை­யி­லான புரட்சி முன்­ன­ணிக்­கும் இடையே கடும் போட்டி நில­வு­கிறது.

தேர்­த­லில் குஸ்­மாவோ அல்­லது அல்­காட்­டிரி பிர­த­ம­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­ப­ட­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. தீமோர் லெஸ்டே அண்­மைய ஆண்­டு­க­ளாக எண்­ணெய், எரி­வாயு சார்ந்த பொரு­ளி­ய­லி­ருந்து மீண்டு வர போராடி வரு­கிறது.