கெய்ரோ/துபாய்: சூடானின் போரில் ஈடுபட்டு வரும் இரு பிரிவுகளும் சனிக்கிழமை பிற் பகுதியில் ஏழு நாள் போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
சூடானில் நடைபெற்று வரும் போர் நாட்டை குழப்பத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஆறாவது வாரமாக சண்டை நடைபெற்று வருகிறது.
ஒப்பந்தத்தின்படி போர் நிறுத்தம் இன்று கார்டும் நேரப்படி இரவு 9.45 மணிக்கு அமலுக்கு வரும் என்று பேச்சுவார்த்தைக்கு உதவிய அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் தெரிவித்துள்ளன.
இதற்கு முன்பு செய்யப்பட்ட பல போர்நிறுத்த ஒப்பந்தங்கள் மீறப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அமெரிக்க-சவுதி மற்றும் அனைத்துலுக ஆதரவுடன் போர்நிறுத்தம் கண்காணிக்கப்படும்.
ஆனால் எந்த வகையில் கண்காணிப்பு நடவடிக்கை இடம்பெறும் என்பது தெரிய வில்லை.

