நாய்க்குத் தீ வைத்த இளையருக்கு பிரம்படியிலிருந்து விலக்கு

1 mins read
2fe4431c-d773-4a02-9159-6e6bd770aab3
-

ஜோகூர் பாரு: நாய்க்­குத் தீ வைத்த குற்­றத்தை ஒப்­புக் கொண்ட இளை­ய­ருக்கு உயர்­ நீ­தி­மன்­றம் பிரம்­படி தண்­ட­னை­யி­லிந்து விலக்கு அளித்­துள்­ளது.

ஏப்­ரல் 19ஆம் தேதி 18 வய­தான பிரா­டென் யாப்­புக்கு கீழ் நீதி­மன்­றம் வழங்­கிய பிரம்­ப­டித் தண்­ட­னையை உயர் நீதி­மன்ற நீதி­பதி அபு பக்­கர் கத்­தார் மறு­ ப­ரி­சீ­லனை செய்­தார்.

இது தொடர்­பாக இளை­ய­ரின் வழக்­க­றி­ஞர் ஜி.கே. ஸ்ரீத­ரன் மற்றும், தற்­காப்­புத் தரப்பு வழக்­க­றி­ஞருடன் அவர் ஆலோ­சனை நடத்­தி­னார்.

பின்­னர் இளை­ய­ருக்­குப் பிரம்­படி தண்­டனை விதிக்க அவர் தடை விதித்­தார்.

கீழ் நீதி­மன்­றம், ஓராண்டு நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்­பின் கீழ் இளை­யரை வைக்­க­வும் நீதி­மன்­றத்­தில் அனை­வ­ரின் முன்­னி­லை­யில் லேசான ஏழு பிரம்­படி கொடுக்­க­வும் உத்­த­ர­விட்­டது.

ஆனால் உயர்­நீ­தி­மன்­றத்­தின் முடி­வால் ஒராண்டு நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்பை மட்­டுமே இளை­யர் நிறை­வேற்ற வேண்­டும்.

குற்­ற­வி­யல் நடை­மு­றைச் சட்­டப்பிரிவு 293ன்கீழ் இரண்டு தண்­ட­னை­கள் வழங்க முடி­யா­த­தால் நீதி­பதி இம்முடிவை எடுத்­தாக வழக்­க­றி­ஞர் ஸ்ரீத­ரன் விளக்கமளித்துள்ளார்.

கடந்த ஏப்­ரல் 12ஆம் தேதி ஒரு பெண் நாயை அடித்து தீ வைத்­துத் தாள முடி­யாத வலி ஏற்­ப­டுத்­திய கொடூ­ர­மான குற்றச்செ­யல் புரிந்ததை யாப் ஒப்­புக்கொண்­டார்.