கியவ்: உக்ரேனின் பக்முட் நகரை ரஷ்யா கைப்பற்றிவிட்டதாக தகவல் வெளியான நிலையில் ரஷ்யா முழுமையாக வெற்றி பெறவில்லை என்று உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.
கிழக்கு உக்ரேனிய நகரமான பக்முட் உங்களுடைய படையின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்று கேட்டதற்கு, "துயரமான சம்பவம், பக்முட் எப்போதும் எங்களுடைய இதயத்தில் இருக்கும்," என்று ஸெலன்ஸ்கி கூறினார்.
பின்னர் அந்த நகரம் ரஷ்யாவிடம் வீழ்ந்துவிடவில்லை என்று அவரது அலுவலகம் விளக்க மளித்தது.
இதற்கிடையே சனிக்கிழமை அன்று ரஷ்யாவின் துணைப்படைகள் பக்முட்டை கைப்பற்றிவிட்டதாக அறிவித்தன.
மறுநாளே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் பக்முட் போரில் வென்றுவிட்டதாக தெரிவித்தார்.
இந்தப் போரில் சிறப்பாக செயல்பட்ட அனைத்து வீரர் களுக்கும் விருது வழங்கப்படும் என்றார் அவர்.
ஆனால் உக்ரேனிய கிழக்கு வட்டார தளபத்தியத்தின் பேச்சாளர் ஒருவர், பக்முட்டின் தெற்கே பல கட்டடங்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் எதிர்தாக்குதலுக்கு ஆயத்தமாகி வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.