வாஷிங்டன்: மூன்று வயது சிறுமி துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
அவர்களில் ஒருவர் மற்றொரு மாநிலத்தில் கொலைச் சம்பவத்துக்காக தேடப்பட்ட சந்தேக நபர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வியாழன் மாலை இண்டியானாவில் உள்ள வீட்டில் சிறுமிக்கு எப்படியோ துப்பாக்கி கிடைத்து ஒரு சுற்று சரமாரியாகச் சுட் டார்.
இதில் சிறுமியின் தாயாரும் வீட்டுக்கு வந்த அவரது நண்பர் 23 வயது டிரேஷான் ஸ்மித்தும் காயம் அடைந்தனர்.
லஃபாயெட் மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர்களது உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ஸ்மித் கொலைக் குற்றத்திற்காக தேடப்பட்டவர் என்ற விவரம் தெரியவந்தது. உடனடியாக ஸ்மித்தை காவல் துறையினர் கைது செய்தனர்.
சிறுமிக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என்பது பற்றிய விவரமில்லை.
ஸ்மித் கைது செய்யப்பட்டது தொடர்பில் குக் கவுண்டியின் காவல்துறை விசாரணைக்கு லஃபாயெட் காவல்துறை முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று லெப்டினெண்ட் ஹார்ட்மேன் தெரிவித்துள்ளார்.

