கடன் உச்சவரம்பு; அதிபர் பைடனுக்கு நெருக்கடி

கடன் உச்சவரம்பு; அதிபர் பைடனுக்கு நெருக்கடி

1 mins read
65f19f0f-9475-4c95-8b59-a2197130ce1f
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வின் எதிர்­கா­லத்­தைப் பாதிக்­கும் கடன் உச்­ச­வ­ரம்பு விவ­கா­ரத்­தில் அதி­பர் பைட­னுக்கு நெருக்­கடி அதி­க­ரித்­துள்­ளது. ஜப்­பா­னின் ஹிரோ­ஷிமா நக­ரில் நடை­பெற்ற ஜி7 உச்­ச­நிலை மாநாட்டை அவ­ச­ர மாக முடித்­துக் கொண்டு நாடு திரும்­பி­யுள்ள அவர் குடி­ய­ர­சுக் கட்­சி­யின் சபா­நா­ய­கர் கெவின் மெக்­கர்த்தியுடன் மற்­றொரு சுற்­றுப் பேச்சு நடத்­து­கி­றார். இந்த விவ­கா­ரத்­தில் ஜன­நா­ய­கக் கட்­சிக்­கும் குடி­ய­ர­சுக் கட்­சிக்­கும் இடையே கருத்து வேறு­பாடு நில­வு­கிறது. குடி­ய­ர­சுக்­குக் கட்­சி­யின் கோரிக்கை ஏற்க முடி­யா­த­தாக இருக்­கிறது என்று திரு ஜோ பைடன் கூறி­யுள்­ளார்.

அமெ­ரிக்க கரு­வூ­லத்­தால் நிர்­ண­யிக்­கப்­பட்ட ஜூன் 1ஆம் தேதி காலக்­கெ­டு­வுக்­குள் அதிக கடன் வாங்க நாடா­ளு­மன்­றம் அனு­மதி வழங்­கி­யாக வேண்­டும். ஆனால் இரு தரப்­பி­ன­ருக்­கும் சம­ர­சம் ஏற்­ப­டு­வ­தாக இல்லை.

குடி­ய­ர­சுக் கட்சி செல­வு­களை குறைக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­து­கிறது.

'ஜி7' மாநாட்டை முடித்­துக் கொண்டு வாஷிங்­டன் திரும்பு வதற்கு முன்பு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அதி­பர் பைடன், கடன் உச்ச வரம்பை உயர்த்து வதற்­காக செல­வி­னங்­க­ளைக் குறைக்க வேண்­டும் என்ற குடி­ய­ர­சுக் கட்­சி­யின் நிபந்­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தாக இருக்­கிறது என்று குறிப்­பிட்­டார்.

"எதிர்த்­த­ரப்­பி­னர் தங்­க­ளு­டைய நிலை­யி­லி­ருந்து மாற வேண்­டும்," என்­றார் அவர்.

ஞாயிற்­றுக்­கி­ழமை டுவிட்­டர் பதி­வில், சமூக, சுகா­தார உத­வி­களைக் குறைக்­கும் நிபந்­த­னை­க­ளைத் திட்­ட­வட்­ட­மாக எதிர்ப்­ பதாக பைடன் தெரி­வித்திருந்­தார்.