தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சவுதி அரேபியாவின் முதல் விண்வெளி வீராங்கனை; நால்வர் விண்வெளிப் பயணம்

2 mins read
9e84e62e-752b-41b2-b272-5e4b4008199c
-

புளோ­ரிடா: 'ஸ்பேஸ்­எக்ஸ்' நிறு ­வ­னம் சவுதி அரே­பி­யா­வின் முதல் பெண் வீராங்­கனை உட்­பட நால்­வரை விண்­வெ­ளி­யில் உள்ள விண்­வெளி நிலை­யத்­திற்கு அனுப்­பி­யுள்­ளது.

புளோ­ரி­டா­வில் உள்ள கென்­னடி விண்­வெளி நிலை­யத்­தி­லி­ருந்து ஞாயிறு மாலை ஃபால் கன்-9 விண்வெளிக்­க­லம் வீரர்­களை ஏற்­றிச் சென்­றது.

ஆக்­ஸி­யம் ஸ்பேஸ் எனும் நிறு­வ­னம் இத்­திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­தி­யது. ஆக்­ஸி­யம், ஸ்பேஸ்­எக்ஸ் ஆகிய இரண்­டும் உல­கப் பணக்­கா­ர­ரான எலன் மாஸ்க் நடத்­தும் நிறு­வ­னங்களா கும்.

விண்­வெ­ளி­யில் சொந்­த­மாக விண்­வெளி ஆய்வு நிலை­யத்தை அமைக்­கும் இலக்கோடு விண்­வெளி வீரர்­க­ளின் பய­ணங்­க­ளுக்கு ஆக்­ஸி­யம் ஏற்­பாடு செய்து வரு­கிறது.

அண்­மைய ஏஎக்ஸ்-2 விண்­வெ­ளிப் பய­ணத்திற்கு முன்­னாள் நாசா­வின் விண்­வெளி வீர­ரும் ஆக்­ஸி­யம் மனித விண்­வெ­ளிப் பய­ணத் திட்­டத்­தின் இயக்­கு­ந­ரு­மான டாக்­டர் பெகி விட்­சன் தலைமையேற்றுள்ளார்.

விண்­வெ­ளிக்­குச் சென்ற நான்கு வீரர்­களில் தொழி­ல­ தி­ப­ரான பயிற்சி பெற்ற விமானி ஜான் ஷோஃப்னரும் ஒரு­வர். கார் பந்­த­யத்­தில் ஆர்­வ­முள்ள இவர், கண்­ணாடி இழைத் தொலைத்­தொ­டர்பு தொழிற்­து­றை­யில் ஏரா­ள­மான பணத்­தைச் சம்­பா­தித்­தவர். இந்த விண்­வெ­ளிப் பய­ணத்­திற்கு தெரி­விக்­கப்­ப­டாத பெரும்­ப­ணத்தை அவர் கொடுத்­துள்­ளார். ஸ்பேஸ்­எக்ஸ் டிரா­கன் விண்­வெ­ளிக் கலத்­தில் பய­ணம் செய்ய ஒரு­வ­ருக்கு 55 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் (சிங்­கப்­பூர் வெள்ளி74 மில்­லி­யன்) வசூ­லிக்கப்ப­டு­வ­தாகத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

விண்­வெளி நிலை­யத்­தில் எட்டு நாள் தங்­கி­யி­ருக்­கும் நான்கு வீரர்­களும் பூமிக்­குத் திரும்­பு­வ­தற்கு முன்பு இரு­ப­துக்­கும் மேற்­பட்ட ஆய்­வு­களை மேற்­கொள்­­கின்­ற­னர்.

சவுதி அரே­பி­யா­வின் முதல் பெண் வீராங்­க­னை­யின் பெயர் ரயனா பார்­ணவி. அந்­நாட்­டின் விண்­வெ­ளித் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக அவ­ரது பய­ணம் இடம்­பெ­று­கிறது.

ரயனா பார்­ணவி, அரபு நாடு­களில் இருந்து அனைத்­து­லக விண்­வெளி நிலை­யத்­திற்­குச் சென்ற முதல் பெண் விண்­வெளி வீராங்­கனை என்ற பெரு­மை­யை­யும் பெறு­கி­றார். மற்­றொரு சவுதி வீர­ரும் இந்­தப் பய­ணத்­தில் இடம்­பெற்­றுள்­ளார்.