மலேசியாவின் ஈ.பி.எஃப் கட்டடத்தில் மீண்டும் தீ

1 mins read
1651bcb6-229c-4cb4-b551-dafe617418ba
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வின் பழைய ஈ.பி.எஃப் எனப்­படும் ஊழி­யர் சேம­நிதி வாரி­யத்­தின் கட்­ட­டத்­தில் மீண்­டும் தீ மூண்­டது.

பெட்­டா­லிங் ஜெயா­வில் ஜாலான் காசிங்­கில் இடம்­பெற்று உள்ள அந்தக் கட்­ட­டம் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்பு தீச்­சம்­ப­வத்­தில் சேத­ம­டைந்­தது.

இந்த நிலை­யில் மீண்­டும் அதே கட்­டத்­தில் தீச்­சம்­ப­வம் ஏற்­பட்­டுள்­ளது.

நேற்று காலை 10.35 மணி­ய­ள­வில் தீச்­சம்­ப­வம் குறித்து தக­வல் வந்­த­தாக சிலாங்­கூர் தீய­ணைப்பு, மீட்­புப் பிரிவு தெரி­வித்­தது.

உடனே பெட்­டா­லிங் ஜெயா, தாமான்­சாரா, பென்­சாலா, பூச்சோங் ஆகிய பகு­தி­க­ளி­லி­ருந்து தீய­ணைப்பு வாக­னங்­க­ளு­டன் தீய­ணைப்பு வீரர்­கள் அனுப்­பி­வைக்­கப்­பட்­ட­தாக மலே­சி­ய­கினி தக­வல் தெரி­வித்­தது.

தீயை அணைக்­கும் முயற்­சி­யில் கோலா­லம்­பூர் தீய­ணைப்பு, மீட்புப் பிரி­வும் உதவி செய்­தது.

"கட்­ட­டத்­தின் நான்­கா­வது, ஐந்­தா­வது மாடி­யில் தீ மூண்­டது. தீய­ணைப்­பா­ளர்­கள் 11.00 மணிக்­குள் வெற்­றி­க­ர­மாக தீயைக் கட்டுக்­குள் கொண்­டு­வந்­த­னர்," என்று சிலாங்­கூர் தீய­ணைப்பு, மீட்­புப் பிரி­வின் உதவி இயக்­கு­நர் ஹாஃபிஷாம் முஹ­மட் நூர் தெரி­வித்­தார்.

ஊழி­யர் சேம­நிதி வாரி­யம் (ஈ.பி.எஃப்), மலே­சி­யா­வின் ஆகப்­பெ­ரிய ஓய்­வூ­திய நிதி அமைப் பாகும். தற்­போது அந்­தக் கட்­ட­டத்­தில் யாரும் இல்லை. யாருக்­கும் காயம் ஏற்­ப­ட­வில்லை என்று ஈ.பி.எஃப் கூறி­யது.

தீச்சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் அது சொன்னது.

பசிஃபிக் சீனியர் லிவிங் என்ற அமைப்புடன் முப்பது ஆண்டு ஒப்பந்தத்தில் ஈ.பி.எஃப் கையெழுத்திட்ட பிறகு 2024ஆம் ஆண்டில் அந்தக் கட்டடம் மீண்டும் திறக்க திட்டமிடப் பட்டிருந்தது.