தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குமுறியது மெராப்பி எரிமலை

1 mins read
cbe9ffdc-5cd7-4f6d-8cc2-e3f9e1be28ad
செவ்வாய்க்கிழமையன்று குமுறிய மெராப்பி எரிமலை. படம்: ஏஎஃப்பி -

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் இருக்கும் மெராப்பி எரிமலை செவ்வாய்க்கிழமையன்று குமுறியது.

இரண்டு கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவுக்கு எரிமலைக் குழம்பு வழிந்தோடியது.

மெராப்பி எரிமலை குமுறியதால் பலமுறை நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அதைக் கண்காணிக்கும் 'பிபிபிடிகேஜி' எனும் அரசாங்க அமைப்பு தெரிவித்தது.

வானிலை தெளிவாக இருந்ததால் எரிமலை குமுறியதை மக்கள் எளிதில் கண்டிருக்கின்றனர்.

யோக்யகார்த்தா நகருக்கு சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மெராப்பி எரிமலை.

இதற்கு முன்பு 2010ஆம் ஆண்டில்தான் மெராப்பி எரிமலை பெரிய அளவில் குமுறியது.

அப்போது 300க்கும் அதிகமானோர் மாண்டனர், அப்பகுதியில் வசித்த சுமார் 280,000 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.