பொருளியல் ஒத்துழைப்பை அதிகரிக்கும் சீனா-ரஷ்யா

பொருளியல் ஒத்துழைப்பை அதிகரிக்கும் சீனா-ரஷ்யா

2 mins read
263dbf4c-c6b0-485a-9b9d-724cb9b919bd
-

உள்கட்டமைப்பு, வர்த்தகம் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள்

ஷாங்­காய்: ரஷ்­யப் பிர­த­மர் மிக்­கைல் மிஷுஸ்­டின் (படம்) அதி­காரத்­து­வப் பய­ணம் மேற்­கொண்டு சீனா சென்­றுள்­ளார்.

நேற்று முன்­தி­னம் ஷாங்­காய் நக­ருக்­குச் சென்ற அவரை சீனா­வுக்­கான ரஷ்­யத் தூத­ரும் மாஸ்­கோ­விற்­கான பெய்­ஜிங்­கின் உய­ரிய அர­ச­தந்­தி­ரி­யும் விமான நிலை­யத்­தில் வர­வேற்­ற­னர்.

ரஷ்­யப் பிர­த­மர் தமது சீனப் பய­ணத்­தின்­போது சீன அதி­பர் ஸி ஜின்­பிங்­கைச் சந்­திப்­பார் என்று கூறப்­பட்­டது. இரு நாடு­களுக்­கும் இடையே உள்­கட்­ட­மைப்பு, வர்த்­த­கம் தொடர்­பான பல்­வேறு ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­க­வி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

ரஷ்ய-சீன வர்த்­த­கக் கருத்­த­ரங்­கில் பிர­த­மர் மிஷுஸ்­டின் கலந்து­கொள்­வார் என்று ரஷ்ய அதி­பர் மாளிகை தெரி­வித்­தது. ஷாங்­கா­யில் உள்ள எண்ணெய், எரிவாயு ரசாயன ஆய்­வுக் கழ­கத்­தைப் பார்­வை­யி­டு­வ­தோடு ரஷ்ய வர்த்­த­கப் பிரதிநிதி­க­ளு­டன் பேச்சு நடத்­து­வார் என்­றும் கூறப்­பட்­டது.

தடை விதிக்­கப்­பட்ட ரஷ்­யப் பெரு­வர்த்­த­கர்­கள் பல­ருக்­கும் கருத்­த­ரங்­கில் கலந்­து­கொள்ள அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. எரி­சக்தி விவ­கா­ரங்­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் ரஷ்­யத் துணைப் பிர­த­மர் அலெக்­ஸாண்­டர் நோவாக்­கும் அதில் கலந்­து­கொள்­கி­றார் என்று புளூம்­பெர்க் நிறு­வ­னம் தக­வல் வெளி­யிட்­டுள்­ளது.

கருத்­த­ரங்கு நேற்று ஷாங்­காய் நக­ரில் உள்ள ரஷ்ய துணைத் தூத­ர­கத்­தில் நடை­பெற்­றதை ஒட்டி அந்­தப் பகு­தி­யில் காவல்­துறை­யி­னர் அதிக எண்­ணிக்­கை­யில் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்டு இருந்­த­னர்.

கருத்­த­ரங்­கிற்­குப் பிறகு பிர­த­மர் மிஷுஸ்­டின் பெய்­ஜிங் சென்று சீன அதி­பர் ஸியைச் சந்­திப்­பார். சீனப் பிர­த­மர் லி சியாங்­கை­யும் அவர் சந்­தித்­துப் பேசு­வார் என்று ரஷ்ய அர­சாங்க ஊட­கம் தெரி­வித்­தது.

உக்­ரேன் மீதான போருக்­குப் பிறகு ரஷ்யா மீது மேற்­கத்­திய நாடு­கள் தடை விதித்த நிலை­யில் சென்ற ஆண்டு சீனா ரஷ்யாவிடம் இருந்து அதிக அள­வில் எரி­சக்தியை இறக்­கு­மதி செய்­யத் தொடங்­கி­யது.

போர் தொட­ரும் நிலை­யில், இரு நாடு­களும் அவற்­றுக்கு இடை­யி­லான பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்­பை­யும் அர­ச­தந்­திர உற­வு­களை­யும் அதி­க­ரித்து வந்­துள்­ளன. அவற்­றுக்கு இடை­யி­லான உத்­தி­பூர்வ பங்­கா­ளித்­து­வம் மேலும் அணுக்­க­மாகி உள்­ளது.

ரஷ்ய-உக்­ரே­னி­யப் போர் தொடர்­பில் சீனா மாஸ்­கோவை இது­வரை கண்­டிக்­க­வில்லை. தடை­க­ளால் அனைத்­து­லக நாடு­க­ளி­ட­மி­ருந்து ரஷ்யா அதி­கம் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கும் நிலை­யில் சீன-ரஷ்ய உற­வில் பெய்­ஜிங்­கின் கையே ஓங்­கி­ இருப்­ப­தா­கக் கவ­னிப்­பா­ளர்­கள் கூறுகின்­ற­னர்.