வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் பாதுகாப்புத் தடுப்புகளில் லாரியை மோதியதாக ஆடவர் ஒருவர்மீது அமெரிக்கக் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.
நேற்று முன்தினம் ஆடவர் வாடகைக்கு எடுத்த லாரியை அவ்வாறு மோதினார்.
அதிபர், துணை அதிபர் அவர்களின் குடும்ப உறுப்பினரைக் கொலை செய்தல், கடத்துதல், அவர்களுக்கு ஊறு விளைவித்தல் போன்றவை தொடர்பில் அந்த ஆடவர் மிரட்டல் விடுத்ததாக அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஆடவர் குறித்த மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
சம்பவத்துக்குப் பிறகு ஆடவர் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறிய அமெரிக்க ரகசிய சேவைப் பிரிவு அவரால் ஆபத்து ஏதும் இல்லை என்று கூறியது.