புயலால் பள்ளிக் கட்டடம் இடிந்து எழுவர் பலி

புயலால் பள்ளிக் கட்டடம் இடிந்து எழுவர் பலி

1 mins read
9f99c5a4-0571-4e40-b9b6-c91f15c419ad
-

பேங்­காக்: தாய்­லாந்­தின் பிச்­சிட் வட்­டா­ரத்­தில் நேற்று முன்­தி­னம் பள்ளி ஒன்­றின் விளை­யாட்­டுத் திட­லில் இருந்த கட்­ட­டம் இடிந்து விழுந்­த­தில் ஏழு பேர் மாண்­ட­னர். அவர்­களில் நால்­வர் சிறு­வர்­கள்.

மூன்று பக்­கம் சுவர்­களும் மேற்­கூ­ரை­யும் கொண்­டி­ருந்த கட்­ட­டம் (படம்) புயல் காற்­றால் முற்­றி­லும் இடிந்து விழுந்­த­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர். உயி­ரி­ழந்த சிறு­வர்­கள் ஆறு வய­துக்­கும் 13 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள். சம்­ப­வத்­தின்­போது அச்­சி­று­வர்­கள் பார்­வை­யா­ளர்­கள் முன்­னி­லை­யில் அவ்­வி­டத்­தில் விளை­யா­டிக்­கொண்­டி­ருந்­த­தா­கத் தெரி­கிறது. உள்­ளூர் நேரப்­படி மாலை 6.30 மணி­ய­ள­வில் புயல் வீசி­ய­தா­க­வும் அதைத் தொடர்ந்து கன­மழை பெய்­த­து­டன் பலத்த காற்­றும் வீசி­ய­தால் கூரை திடீ­ரென்று இடிந்து விழுந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது. உயி­ரி­ழந்த மற்ற மூவ­ரில் இரு­வர் பெற்­றோர். ஒரு­வர் அக்­கட்­ட­டத்­தின் பரா­ம­ரிப்­பா­ளர். சம்­ப­வத்­தில் மேலும் 18 பேர் காய­ம­டைந்­த­னர். அவர்­கள் இரு மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்­ற­னர். அவர்­க­ளின் உடல்­நிலை சீராக இருப்­ப­தா­கக் கூறப்­பட்­டது. புய­லால் சாம் நாம் மாவட்­டத்­தில் சில வீடு­கள் சேத­முற்­ற­தா­கக் காவல்­துறை கூறி­யது. தாய்­லாந்­தில் பரு­வ­ம­ழைக் காலம் தொடங்­கி­யுள்ள நிலை­யில் நாட்­டின் பெரும்­பா­லான இடங்­களில் அடுத்த சில நாள்­களில் கன­மழை பெய்­யும் என முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

படம்: சால்­வே­ஷன் மீட்­புச் சங்க ஃபேஸ்புக்