மலேசியாவில் சிங்கப்பூரர் கைது

மலேசியாவில் சிங்கப்பூரர் கைது

1 mins read
9e7527e5-fef9-4569-b6b2-bd361d8aafb0
-

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் கிள்ளான் பள்ளத்தாக்கில் செயல்பட்ட இணைய சூதாட்ட அழைப்பு நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

அந்நிலையம் வெளிநாட்டு வாடிக்கையாளர்களைக் குறிவைத்து செயல்பட்டது.

சோதனையின்போது, ஒரு சிங்கப்பூர் ஆடவர் உட்பட 40 சந்தேகப் பேர்வழிகள் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் 28 வயதுக்கும் 58 வயதுக்கும் உட்பட்டவர்கள்.

நிலையத்தில் இருந்து 88 கைத்தொலைபேசிகள், மூன்று வாகனங்கள், பல கணினிகள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏறத்தாழ $15,400 மதிப்பிலான ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டோர் விசாரணைக்காக நாளை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பர் என்று மலேசிய ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.