பல தட வாகனப் போக்குவரத்து சாலை வரி வசூல் முறையை மேம்படுத்த முயற்சி

பல தட வாகனப் போக்குவரத்து சாலை வரி வசூல் முறையை மேம்படுத்த முயற்சி

1 mins read
9ab67c42-877b-422a-8114-021c7971778f
-

கோலா­லம்­பூர்: மலே­சிய அர­சாங்­கம், பல தட வாக­னப் போக்­கு­வரத்து சாலை வரி வசூல் முறையை மேம்­ப­டுத்­து­வது குறித்து ஆராய்ந்து வரு­வ­தாக பொதுப்­ப­ணித் துறை துணை அமைச்­சர் அப்­துல் ரஹ்­மான் முக­மது கூறி­யி­ருக்­கி­றார்.

2025ல் அம­லா­க­வி­ருக்­கும் அம்­மு­றை­யில் கட்­ட­ணம் செலுத்­து­வ­தற்­கான தெரி­வு­கள் பன்­மு­கப்­ப­டுத்­தப்­படும் என்­றார் அவர். தற்­போது ஒரே கட்­ட­ணச் சேவையை மட்­டுமே பயன்­ப­டுத்த முடி­யும்.

புதிய முறை­யின்­கீழ் சாலை வரிக் கட்­டண முகப்­பில் செல்­லும்­போது போதிய தொகை இல்­லா­மல் சிர­மப்­பட நேரி­டாது.

'ஆர்­எ­ஃப்­ஐடி' கட்­ட­ணம் செலுத்­தும் முறை­யில் ஏற்­படும் சிக்­கல்­க­ளால் வரி வசூல் முகப்­பு­களில் வாகன நெரி­சல் ஏற்­ப­டு­வது குறித்து நாடா­ளு­மன்­றத்­தில் எழுப்­பப்­பட்ட கேள்­விக்­குப் பதில் அளித்­துப் பேசிய துணை­ய­மைச்­சர் வாக­னப் போக்­கு­வ­ரத்தை எளி­தாக்க புதிய முறை உத­வும் என்று கூறி­னார்.

தற்­போது வாகன நெரி­ச­லைத் தவிர்க்க, வாக­ன­மோட்­டி­கள் தங்­க­ளின் 'டச் அண்ட் கோ' அட்டை, 'இவா­லட்' ஆகி­ய­வற்­றில் போதிய தொகை இருப்­பதை உறுதி ­செய்துகொள்­ளும்­படி கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.