கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் உள்ள சுமங்காட் பாயவ் தீவில் முதலை தாக்கியதால் 12 வயதுச் சிறுவன் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் நடந்ததாகக் கூறப்பட்டது.
நேற்று முன்தினம் காலை 8.25 மணியளவில் உதவி கோரி அழைப்பு வந்ததாக சாபா தீயணைப்பு, மீட்புத் துறை கூறியது.
பின்னர் 10.38 மணிக்கு, சம்பவ இடத்திலிருந்து ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
முதலை தாக்கிய சம்பவம் குறித்து வனவிலங்குத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தரப்பட்டதாகக் கூறப்பட்டது.

