சிட்னி: ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரி ஒருவரால் டீசரால் சுடப்பட்ட 95 மூதாட்டி நேற்று மரணமடைந்தார். மூதாட்டி கிளாரே நவ்லாண்ட் மருத்துவமனையில் அமைதியாக இறந்தார். அப்போது அவரைச் சுற்றி குடும்பத்தினர், அன்புக்குரியவர்கள் இருந்தனர் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது. கடந்த மே 17ஆம் தேதி சிட்னியிலிருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் கூமா நகரில் உள்ள பராமரிப்பு இல்லத்தில் மறதியால் பாதிக்கப்பட்ட மூதாட்டி சமையல் அறை கத்தியுடன் காணப்பட்டதால் அவரை காவல்துறையினர் டீசரால் சுட்டனர் என்று ஊடகங்கள் தெரிவித்தன.
ஆஸ்திரேலியாவின் 95 வயது மாது மரணம்
1 mins read
-

