வாஷிங்டன்: கொவிட்-19 கொள்ளைநோய் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
ஆனால் இன்னமும் நான்கு நிமிடங்களுக்கு ஒருவர் அந்தக்கிருமிக்கு உயிரிழந்து வருகின்றனர்.
தடுப்பூசி முழுமையாக போடாத நாடுகளிலும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் கொவிட்-19 ஆபத்தாக விளங்குகிறது.
பெரும்பாலோருக்கு கிருமியின் அச்சுறுத்தல் குறைவாக இருந்தாலும் மக்கள்தொகையில் குறிப்பிட்ட ஒரு பகுதியினர் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். முன்பு எதிர்பார்த்ததைவிட கிருமியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
அமெரிக்காவில் 2022ஆம் ஆண்டில் இதய நோய்க்கு அடுத்ததாக கொவிட்-19 மூன்றாவது ஆகப்பெரிய உயிர்க்கொல்லியாக இருந்துள்ளது.
மரணங்களை ஏற்படுத்தும் புகைபிடித்தல், போக்குவரத்து விபத்து போன்ற பொதுவான காரணங்களால் கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. ஆனால் கொவிட்-19 விவகாரத்தில் கட்டாயத் தடுப்பூசி, மூடப்பட்ட இடங்களில் முகக்கவசம் அணிவது போன்ற கிருமியால் பாதிக்கும் வழிகளை அரசியல்வாதிகள் வலியுறுத்துவதில்லை என்று மிசௌரியில் உள்ள செயின்ட் லூயிஸ் சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்பின் தொற்றுநோயியல் மையத்தின் இயக்குநர் திரு ஜியாத் அல்-அலி தெரிவித்தார். கொவிட்-19 இன்னும் பலரைத் தொற்றுக் கிருமி கொன்று வருகிறது என்றார் அவர்.

