ஹாங்காங்: ஆங்கிலம் தெரியாத பயணிகளிடம் பாரபட்சமாக நடந்து கொண்டதற்காக மூன்று பணிப்பெண்களை கேத்தே பசிபிக் ஏர்வேஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகள் புகார் அளித்ததைத் தொடர்ந்து நிறுவனம் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனாவின் தென்மேற்கு நகரமான செங்டுவிலிருந்து ஹாங்காங் சென்ற சிஎக்ஸ்-987 விமானத்தில் பயணம் செய்த பயணி களுக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து மிகவும் வருந்துவதாக விமான நிறுவனத்தின் நிர்வாகம் தெரிவித்தது. இதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் அது கூறியது.

