கோலாலம்பூர்: பொதுமக்களுக்குச் சொந்தமான 11.2 பில்லியன் ரிங்கிட் ஏப்ரல் 30ஆம் தேதி வரை உரிமை கோரப்படாமல் உள்ளது என்று மலேசிய துணை நிதி அமைச்சர் அஹமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
இதில் 70 விழுக்காடு கடந்த ஏழு அல்லது மேற்பட்ட ஆண்டுகளில் மலேசியர்கள் பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்குகளில் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
"பெரும்பாலான கோரப்படாத பணம் வர்த்தக கணக்குகளில் போனஸ் மற்றும் ஈவுத் தொகையாக வழங்கப்பட்டவை.
நேற்று வரை 3.2 பில்லியன் ரிங்கிட் பொதுமக்களுக்குத் திருப்பி தரப்பட்டுள்ளது.
"உரிமை கோரப்படாத பணம், வர்த்தக கணக்குகளில் ஒரு வருட காலத்தில் செலுத்தப்பட்ட போனஸ், ஈவுத்தொகை ஆகியவற்றை உள்ளடக்கியது.
மொத்த தொகையில் உரிமை கோரப் படாத பணத்தில் 70 விழுக்காடு ஏழு ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் செயல்படாத வங்கிக் கணக்குகளில் இருந்து வந்தது," என்று நேற்று நாடாளுமன்றத்தில் அஹமட் தெரிவித்தார்.
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியைச் சேர்ந்த புக்கிட் பிந்தாங் உறுப்பினரான ஃபோங் குய் லுன் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
கோரப்படாத பணம் எவ்வளவு, அவை தேசிய வளர்ச்சிக்கு எந்த வகையில் பயன்படுத்தப்படும் என்று திரு ஃபோங் குய் லுன் கேள்வி எழுப் பியிருந்தார்.

