ஜெர்மனியில் பொருளியல் மந்தம்

பெர்­லின்: ஜெர்­ம­னி­யில் தொடர்ந்து பண­வீக்­கம் நில­வு ­வ­தால் இவ்­வாண்­டின் முதல் மூன்று மாதங்­கள் பொரு­ளி­யல் மந்த நிலை­யில் வீழ்ந்­தது என்று புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

ஐரோப்­பா­வின் ஆகப்­பெ­ரிய பொரு­ளி­ய­லான ஜெர்­மனி, ரஷ்­யா­வின் எரி­வாயு விநி­யோ­கம் துண்­டிக்­கப்­பட்­ட­தால் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­ட­தாக பகுப்­பாய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

ஜன­வரி முதல் மார்ச் வரை அதன் பொரு­ளி­யல் 0.3 விழுக்­காடு சுருங்­கி­யது. கடந்த ஆண்டு கடைசி மூன்று மாதங்­களிலும் 0.5 விழுக்­காடு பொரு­ளி­யல் குறைந்­தது.

ஒரு நாட்­டில் இரண்டு முறை தொடர்ந்து மூன்று மாதக் காலக்­கட்­டத்­தில் பொரு­ளி­யல் சரிவு ஏற்பட்டால் அந்த நாடு பொரு ளியல் மந்­தத்தை நோக்­கிச் செல்­வ­தாக எடுத்­துக் கொள்­ளப்­ப­டு­கிறது.

மோச­மான பண­வீக்­கம் கார­ண­மாக ஜெர்­ம­னியின் சில்­ல­றைத் துறை­யும் அடி­மட்­டத்­தில் வீழ்ந்து பொரு­ளி­யல் சரிவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்று வங்கி ஒன்றின் பகுப்­பாய்­வா­ளர் ஒருவர் கூறினார்.

கடந்த ஏப்­ர­லில் ஜெர்­ம­னி­யின் பண­வீக்­கம் 7.2 விழுக்­கா­டாக இருந்­தது. இது, ஐரோப்­பா­வில் நில­வும் சரா­சரி பண­வீக்­கத்­தை­விட அதி­கம். ஆனால் பிரிட்­ட­னின் 8.7 விழுக்­காட்­டை­விட இது குறைவு.

“இவ்­வாண்­டின் தொடக்­கத்­தி­லி­ருந்து விலை­வாசி ஜெர்­ம­னிக்கு சுமை­யாக இருந்­துள்­ளது,” என்று மத்­திய புள்­ளி­வி­வ­ரத் துறை அறிக்­கை­ தெரி­வித்­தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!