டிரம்ப்புக்குப் போட்டியாக ஃபுளோரிடா ஆளுநர் டிசான்டிஸ்

1 mins read
79162f50-909c-40b2-bf69-aefd3426bd07
-

வாஷிங்­டன்: குடி­ய­ர­சுக் கட்­சி­யைச் சேர்ந்த ஃபுளோ­ரிடா ஆளு­நர் ரோன் டிசான்­டிஸ் அதி­பர் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்கு மனுத் தாக்­கல் செய்­துள்­ளார்.

கடந்த 18 மாதங்­க­ளாக முன்­னாள் அதி­பர் டோனல்ட் டிரம்ப்­புக்­கும் ஆளு­நர் ரோன் டிசான்­டி­சுக்­கும் இடையே அதி­பர் தேர்­த­லில் போட்­டி­யிடுவது கடு­மை­யான போட்டா போட்டி நில­வியது. டோனல்ட் டிரம்ப் பல குற்­ற­வி­யல் வழக்­கு­களை எதிர்­நோக்­கி­னா­லும் கருத்­துக் கணிப்­பில் அவர் முன்­னணி வகிக்­கி­றார்.

குடி­ய­ர­சுக் கட்­சி­யில் ரோன் டிசான்­டிஸ் வளர்ந்­து­வ­ரும் நட்சத் ­தி­ர­மாக இருந்­தா­லும் டோனல்ட் டிரம்ப் தொடர்ந்து தாக்­கிப் பேசி­யதில் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

இந்த நிலை­யில் 44 வயது ஆளு­நர் ரோன் டிசான்­டிஸ் அதி­கா­ர­பூர்வ அறி­விப்பை வெளி­யி­டு­ வ­தற்கு முன்பு வேட்­பா­ள­ருக்­கான மனுவை அவர் தாக்­கல் செய்­துள்­ளார். சமூக ஊட­க நேர­லையின் போது டுவிட்­டர் உரி­மை­யா­ளர் எலன் மாஸ்க்­கு­டன் உரை­யா­டும் நிகழ்ச்­சி­யில் தாம் போட்­டி­யி­டு­வது குறித்து ரோன் டிசான்­டிஸ் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விப்­பார் என எதிர்­பார்க்­கப்­ப­ட்டது.