வர்த்தகர் மீது குற்றச்சாட்டு

1 mins read
ea6d3cdb-bf56-4987-a891-aa5d2b0a289e
-

கோலா­லம்­பூர்: 'டத்தோ ரோய்' என்­ற­ழைக்­கப்­படும் வர்த்­த­கர், மலே­சிய ஊழல் தடுப்­புப் பிரி­வின் அதி­கா­ரி ஒருவர் ஆகிய இருவர் மீது 400,000 ரிங்­கிட் லஞ்­சம் கேட்­ட­தாக நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம்சாட்­டப்­பட்­டது. இரு­வ­ரும் முன்­னாள் பிர­த­மர் முகை­தீன் யாசி­னின் மகன் விவ­கா­ரம் தொடர்­பான விசா­ர­ணை­யில் லஞ்­சம் கேட்­ட­தா­கத் தெரி கிறது. 'டத்தோ ரோய்' என அழைக்­கப்­படும் முஹ­மட் ஹுசைன் முஹ­மட் நாசர், 54, மற்­றொரு நப­ரான முஹ­மட் ரஸிடி முஹ­மட் சயித், 43 என் ­ப­வ­ரு­டன் சேர்ந்து குற்­றம் சுமத்­தப்­பட்­டார்.

ஊழல் தடுப்­புப் பிரிவு விசா­ரணை நடத்­தி­ய­போது ஃபக்ரி யாசின் மஹி­யா­தினை தடுப்­புக் காவ­லில் வைக்­கக்கூடாது என்­ப­தற்­காக இரு­வ­ரும் லஞ்­சம் எதிர்­பார்த்­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­தக் குற்­றச்­செ­யல், மார்ச் 5ஆம் தேதி இரவு 9.00 மணி­யி­லி­ருந்து 11.00 மணி வரை லோரோங் குரா­வில் உள்ள ஒரு உண­வ­கத்­தில் நடை­பெற்­ற­தா­க­த் தெரி­விக்­கப்­பட்­டது.