கர்ப்பிணி கொலை; 20 வயது இளையர் கைது

கர்ப்பிணி கொலை; 20 வயது இளையர் கைது

1 mins read
0e157cf2-e45b-41fd-936b-4c8e37968b2a
-

சிலாங்­கூர்: கர்­ப்பத்தை மறைக்க மறுத்த காத­லியை கத்­தி­யால் குத்­திக் கொன்­ற சந்­தே­கத்­தில் மலே­சிய ஆட­வர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

அடை­யா­ளங்­களை மறைக்க ஆட­வர் இரண்டு முறை பெண்­ணின் சட­லத்­திற்கு தீ வைத்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

செவ்­வாய்க்­கி­ழமை காலை சிலாங்­கூ­ரில் உள்ள சுங்­காய் புசார் பகு­தி­யில் உள்ள செம்­ பனைத் தோட்­டம் ஒன்­றில் பாதி எரிந்த நிலை­யில் சடலம் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

அதைத்­தொ­டர்ந்து காவல்­துறை அதி­கா­ரி­கள் நடத்­திய விசா­ர­ணை­யில் சந்­தேக நபர் பிடி­பட்­டார்.

கைது செய்­யப்­பட்ட நப­ருக்கு 20 வயது, அவர் அண்­மை­யில் தான் கல்­லூ­ரி­யில் படிப்பை முடித்­தார்.

சந்­தே­க­ ந­பர், அந்த 21 வயது பெண்ணை திங்­கட்­கி­ழமை செம்­ப­னைத் தோட்­டத்­திற்கு அழைத்து சென்­ற­தா­க­வும் அதன் பின்­னர் ஏற்­பட்ட வாக்­கு­வா­தம் கொலை­யாக மாறி­ய­தாகவும் ஆரம்ப­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது. கொல்லப்பட்ட பெண் கிட்டத்­தட்ட 4 மாதம் கர்ப்­பம் என நம்­பப்­ப­டு­கிறது. புலன் விசாரணைத் தொடர்கிறது.