'2035க்குள் உலகின் பெரும் பொருளியலாக சீனா மாறலாம்'

'2035க்குள் உலகின் பெரும் பொருளியலாக சீனா மாறலாம்'

1 mins read
edd8e5dc-b823-4997-ae45-25aca4bafec3
-

தோக்கியோ: சீனா 2035ஆம் ஆண்­டிற்­குள் அமெ­ரிக்­காவை முந்தி உல­கின் ஆகப்­பெ­ரும் பொரு­ளி­ய­லாக மாற­லாம் என்று அனைத்­து­ல­கப் பண­நி­தி­யத்­தின் முன்­னாள் துணைத்­த­லை­வர் சூ மின் கூறினார். ஜப்­பா­னின் நிக்கே நிறு­வ­னம் நடத்­திய ஃபியூச்­சர் ஆஃப் ஏசியா மாநாட்­டில் கலந்து­ கொண்டபோது கேட்­கப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு அவர் பதி­ல­ளித்­தார். இரண்டு நாடு­க­ளின் தற்­போ­தைய வளர்ச்சி விகி­தத்தை ஒப்­பிட்டு அந்­தக் கருத்­தைக் கூறி­ய­தாக மின் தெரி­வித்­தார். முத­லி­டம் பிடிப்­ப­தைக்­காட்­டி­லும் சீனா­வின் பொரு­ளி­யல் முன்­னேற்­றத்­தின் தரம் தான் முக்­கி­யம். அதுதான் சாதா­ரண மக்­க­ளுக்­கும் உத­வும் என்­றார்.