செய்திக்கொத்து

ஐபிஎல்: மும்பை-குஜராத் மோதல்

அகமதாபாத்: ஐபிஎல் போட்டியின் ‘குவாலிஃபையர்-2’ ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. ஆட்டம் அகமதாபாத் விளையாட்டரங்கத்தில் நடக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி ஞாயிற்றுக்கிழமை இரவு நடக்கும் இறுதியாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடும். நேற்று முன்தினம் சென்னையில் நடந்த ‘எலிமினேட்டர்’ ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை மும்பை அணி 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

மான்செஸ்டர் சிட்டி-

பிரைட்டன் ஆட்டம் சமன்

மான்செஸ்டர்: தொடர்ச்சியாக 12 வெற்றிகளைக் குவித்த மான்செஸ்டர் சிட்டியின் வெற்றி ஓட்டத்தை பிரைட்டன் நிறுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரு அணிகளும் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதன்மூலம் பிரைட்டன் அணி யூரோப்பா கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றுள்ளது.

ஆட்டத்தின் 25ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் ஃபில் ஃபோடன் கோல் அடித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரைட்டன் அணியின் ஜூலியோ என்சிசோ 38ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். இரு அணி கோல் காவலர்களும் சிறப்பாகச் செயல்பட்டதால் ஆட்டத்தின் பிற்பாதியில் கோல் ஏதும் பதிவாகவில்லை. புள்ளிப்பட்டியலில் பிரைட்டன் அணி 62 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.

ஸ்பானிய காற்பந்து லீக்

தலைவர் மன்னிப்புக் கேட்டார்

மட்ரிட்: ரியால் மட்ரிட் குழுவுக்காக விளையாடும் வினிசியஸ் ஜூனியர், காற்பந்து ரசிகர்கள் தம்மை இனவாத சொற்கள் கொண்டு தாக்கியதாக சமூக ஊடகங்களில் கடந்த வாரம் புகார் தெரிவித்திருந்தார்.

அதற்கு ஸ்பானிய காற்பந்து லீக் தலைவர் ஜேவியர் டெபாஸ் குறைகூறுவதற்கு முன்னர் சம்பவத்தை விரிவாக விளக்க வேண்டும் என்று பொறுப்பற்ற முறையில் பதில் கூறியிருந்தார்.

அவரின் கருத்திற்கு எதிர்ப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டெபாஸ் தற்போது மன்னிப்பு கேட்டுக்கொண்டார். வினிசியசைத் தாக்கும் நோக்கத்தில் தாம் கருத்தைப் பதிவிடவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தம்மால் முடிந்தவரை இனவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருவதாகவும் கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் டெபாஸ் தெரிவித்தார். மே 21 நடந்த அந்த இனவாதச் சம்பவம் தொடர்பாக 7 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!