'டெளனிங் ஸ்திரீட் சம்பவத்தை பயங்கரவாதச் செயலாக வகைப்படுத்தவில்லை'

'டெளனிங் ஸ்திரீட் சம்பவத்தை பயங்கரவாதச் செயலாக வகைப்படுத்தவில்லை'

1 mins read
120241d3-3951-4415-a3d7-f23c04b3b81c
-

லண்­டன்: பிரிட்­டிஷ் பிர­த­மர் ரிஷி சுனக்­கின் அரசு வசிப்­பி­ட­மான டெள­னிங் ஸ்தி­ரீட்­டின் நுழை­வாயில் கத­வு­க­ளின்­மீது ஒரு­வர் வாக­னத்தை மோதி­யி­ருந்­தார். அச்­சம்­ப­வத்­தைப் பயங்­க­ர­வா­தச் செய­லாக வகைப்­ப­டுத்­த­வில்லை என்று லண்­டன் நகர காவல்­து­றை­ தெ­ரி­வித்­துள்­ளது.

இச்­சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் நிகழ்ந்­தது. அன்றே சந்­தேக நப­ரும் கைது­செய்­யப்­பட்­டார்.

சம்­பந்­தப்­பட்ட வாக­னம் சாலை­யைக் கடந்து டெள­னிங் ஸ்தி­ரீட்டை நோக்­கிச் செல்­லும் காட்சி பிபிசி தொலைக்­காட்சி வெளி­யிட்ட காணொ­ளி­யில் இடம்­பெற்­றது. வாக­னம் மெது­வாக ஓட்­டப்­பட்­ட­தும் தெரிந்­தது.

டெள­னிங் ஸ்தி­ரீட்­டின் முக்­கிய நுழை­வாயிலின் கதவு சேத­மடைந்­த­தா­கத் தெரி­ய­வில்லை.

சந்­தேக நபர் 50 வய­தைத் தாண்­டிய வெள்ளை இனத்­தைச் சேர்ந்த ஆட­வர் என்று சம்­ப­வத்தை நேரில் கண்ட ஒரு­வர் கூறி­னார். ஆகக் கடைசி நில­வ­ரப்­படி டெள­னிங் ஸ்தி­ரீட்­டுக்கு வெளியே சிறிய தடுப்பு இன்­னும் போடப்­பட்­டி­ருப்­ப­தாக அறிக்கை ஒன்­றில் காவல்­துறை குறிப்­பிட்­டது.

யாரும் காய­ம­டை­ய­வில்லை. சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் சேதம் விளை­வித்­தது, அபா­யம் ஏற்படுத்தும் விதத்தில் வாக­னத்தை ஓட்­டி­யது ஆகி­ய­வற்­றின் தொடர்­பில் சம்­பவ இடத்­தில் ஓர் ஆட­வர் கைது­செ­ய்­யப்­பட்­ட­தாக காவல்­துறை முன்­ன­தா­கத் தெரி­வித்­தது. திரு ரிஷி சுனக்­கின் அலு­வ­ல­கம் கருத்து வெளி­யி­ட­வில்லை.

சம்­ப­வம் நேர்ந்­த­போது பல சிறு­வர்­கள் அங்­கி­ருந்து ஓடிச் சென்­ற­தாக டெள­னிங் ஸ்தி­ரீட்­டுக்கு முன்­னால் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்ட ஒரு­வர் கூறி­னார். வாக­னத்­தின் உள்ளே இருந்­த­வரைக் காவல்­து­றை­யி­னர் துப்­பாக்கி முனை­யில் வைத்­தி­ருந்­த­தா­க­வும் அவர் சொன்­னார்.