செல்லப் பிராணியை மீட்கும்போது உயிர்விட்டதாக நம்பப்படும் 85 வயது ஆடவர்

செல்லப் பிராணியை மீட்கும்போது உயிர்விட்டதாக நம்பப்படும் 85 வயது ஆடவர்

1 mins read
dc8002d5-dfe6-4f38-b2da-da0bae3600c4
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வில் தனது நாயை மீட்­கும் முயற்­சி­யில் 85 வயது ஆட­வர் ஒருவர் மர­ண­மடைந்­த­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

மலே­சி­யா­வின் பெந்­தோங் நகர விலங்­குக் கட்­டுப்­பாட்டு அதி­கா­ரி­கள் லாவ் செய் கியூ எனும் ஆட­வ­ரின் நாயைப் பிடித்து செல்ல முயன்­ற­னர். அவர்­களுடன் ஏற்­பட்ட மோத­லில் திரு லாவ் மாண்­ட­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

பெந்­தோங் நக­ரின் தாமான் சாகா பகு­தி­யில் தனது இரண்டு மாடி வீட்­டில் நாயு­டன் வசித்து வந்­தார் திரு லாவ். அவ­ரின் நாய்க்கு ஏழு வயது.

சம்­ப­வம் கடந்த புதன்­கி­ழ­மை­யன்று மாலை ஐந்து மணிக்கு நிகழ்ந்ததாக திரு லாவின் அண்டை வீட்­டா­ரான 55 வயது சான் போ லூங் தெரி­வித்­தார். அப்­போ­து­தான் சில விலங்­குக் கட்­டுப்­பாட்டுத் துறை அதி­கா­ரி­கள் அவர்­கள் இருந்த குடி­யி­ருப்பு வட்­டாரத்­திற்கு வந்­த­தாக அவர் கூறி­னார். அந்த அதி­கா­ரி­கள் பெந்­தோங் நக­ராட்­சிக் குழு­வைச் சேர்ந்­த­வர்­கள்.