வியட்னாமின் உத்தரவுக்கு இணங்காத சீனக் கப்பல்கள்

வியட்னாமின் உத்தரவுக்கு இணங்காத சீனக் கப்பல்கள்

1 mins read
0d942988-1c20-4dd4-8575-a7028c62d076
-

ஹனோய்: வியட்­னா­மின் உத்­த­ர­வை­ மீறி அந்­நாட்­டுக்­குச் சொந்­த­மான பகு­தி­க­ளி­லி­ருந்து சீனா­வின் கப்­பல்­கள் விலகவில்லை.

வியட்­னா­மின் 'எக்ஸ்­கு­ளூ­சிவ் எக்­க­னோ­மிக் ஸோன்' எனப்­படும் அதற்கே உரிய பொரு­ளி­யல் பகுதி­யில் ஆறு சீனக் கப்­பல்­கள் நேற்று காணப்­பட்­டன. தென்­சீனக் கட­லில் ரஷ்ய நிறு­வ­னங்­கள் நடத்­தும் இயற்கை எரி­வாயு நிலை­யங்­க­ளுக்கு அருகே அவை இருந்­தன.

இது, தென்­சீ­னக் கட­லில் நான்­காண்­டு­க­ளா­கக் காணப்­படாத அத்­து­மீ­றல் என்று சில வல்­லு­நர்­கள் கூறி­யுள்­ள­னர். தென்­சீ­னக் கட­லின் பெரும்­பகுதியை சீனா சொந்­தம் கொண்­டா­டி­ வ­ரு­கிறது.