ஜப்பானில் தாக்குதல்; நால்வர் மரணம், சந்தேக நபர் கைது

தோக்­கியோ: ஜப்­பா­னில் குறைந்­தது நால்­வ­ரைப் பலி­வாங்­கிய தாக்­கு­தலை நடத்­தி­ய­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் ஆட­வர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளார். துப்­பாக்கி, கத்தி ஆகி­ய­வற்­றைக் கொண்டு அந்த ஆட­வர் நேற்று முன்­தி­னம் தாக்­கு­தல் நடத்­தி­ய­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது. மாண்­டோ­ரில் இரண்டு காவல்­துறை அதி­கா­ரி­களும் அடங்­கு­வர்.

இச்­சம்­ப­வம் ஜப்­பா­னின் நகானோ வட்­டா­ரத்­தில் நேர்ந்­தது. சந்­தேக நபர் அவ்­வட்­டா­ரத்­தின் நாக்­கானோ நக­ருக்கு அருகே பிடி­பட்­டார். விவ­சாய நிலத்­தில் இருக்­கும் கட்­ட­டம் ஒன்­றில் அவர் கைதானார்.

உள்­ளுர் நேரப்­படி நேற்று அதி­காலை 4.30 மணி­ய­ள­வில் ஆட­வர் தாமாகவே வீட்­டி­லிருந்து வெளியே வந்­த­தா­க­வும் நாக்­கானோ நகர காவல் நிலை­யத்­திற்கு அவர் அழைத்து செல்­லப்­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது. அவர் 30 வய­தைத் தாண்­டிய ஒரு விவ­சாயி என்று நம்­பப்­ப­டு­கிறது.

அவர் பதுங்­கி­யி­ருந்த கட்­ட­டத்­தி­லி­ருந்து அவ­ரின் தாய் தப்­பி­யோ­டி­ய­தாக உள்­ளூர் ஊட­கங்­கள் சில குறிப்­பிட்­டன. வேறு ஒரு பெண்­ணும் கட்­ட­டத்­தில் இருந்­திருக்­க­லாம் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!