கொள்ளைநோய்ப் பரவல் காலத்தின்போது எல்லையில் பெரிய சுவரை எழுப்பிய வடகொரியா

கொள்ளைநோய்ப் பரவல் காலத்தின்போது எல்லையில் பெரிய சுவரை எழுப்பிய வடகொரியா

1 mins read
0f6e2eb3-6ba3-4e12-a39f-b741f7c8de6a
சீனாவின் டான்டோங் நகரிலிருந்து கண்ணுக்குத் தெரியும் வடகொரியாவின் சினுய்ஜு நகரம். படம்: ராய்ட்டர்ஸ் -

சோல்: கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தின்போது தனது எல்லைவழி மக்கள் தப்பியோடுவதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது வடகொரியா.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் அரசாங்கம் அந்நாட்டின் வடக்குப் பகுதியில் பெரிய சுவரை எழுப்பியது.

அதற்கான பணிகள் 2020ஆம் ஆண்டு தொடங்கின.

சுவர் எழுப்பப்பட்டதால் வடகொரியாவுக்கும் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான எல்லை மூடப்பட்டது.

இப்பகுதிவழிதான் வடகொரியர்கள் பொதுவாக வெளியுலகிலிருந்து தகவல் பெற்று வந்தனர்.

மற்ற நாடுகளின் நடப்பு விவகாரங்கள் தொட்ரபிலான தகவல்களை வடகொரியாவில் பெறுவது மிகவும் சிரமமான ஒன்று.

அதோடு, வடகொரியாவிலிருந்து தப்பியோட எண்ணுவோருக்கு இந்த எல்லைப் பகுதியே உகந்ததாக இருந்தது.

2022ஆம் ஆண்டில் 67 வடகொரியர்கள் மட்டுமே தென்கொரியாவுக்குத் தப்பியோடினர்.

2019ஆம் அண்டில் இந்த எண்ணிக்கை 1,047ஆகப் பதிவானது.