பிணைக் கைதியை கொன்றுவிடுவதாக மிரட்டல்

பிணைக் கைதியை கொன்றுவிடுவதாக மிரட்டல்

1 mins read
3cc9bde8-a43d-409c-8ac3-60a7db3db66f
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வின் பாப்­புவா நியூகினி­யின் பிரி­வி­னை­வா­தி­கள், தங்­க­ளின் பிடி­யில் உள்ள நியூ­சி­லாந்து விமா­னியைக் கொன்­று­வி­டு­வ­தாக மிரட்­டல் விடுத்­துள்­ள­னர்.

இன்­னும் இரண்டு மாதத்­திற்­குள் சுதந்­தி­ர­ம­ளிப்­பது தொடர்­பான பேச்­சு­வார்த்­தையைத் தொடங்­க­வில்லை என்­றால், சென்ற பிப்­ர­வரி மாதத்­தில் இருந்து தங்­க­ளி­டம் பிணைக் கைதி­யாக உள்ள பிலிப் மெஹ்­டென்­ஸைக் கொன்­று­வி­டு­வோம் என்று வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று வெளி­யான புதிய காணொ­ளி­யில் பிரி­வி­னை­வா­தி­கள் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.

காணொ­ளி­யில் பேசிய பிணைக் கைதி பிலிப், "பாப்­புவா சுதந்­தி­ரம் குறித்த பேச்­சு­வார்த்தை­யில் இந்­தோ­னீ­சி­யா­வைத் தவிர மற்ற நாடு­களும் ஈடு­பட வேண்­டும் என்று பிரி­வி­னை­வா­தி­கள் விரும்­பு­கின்­ற­னர். இரண்டு மாத காலத்­தில் இது நடை­பெ­ற­வில்லை என்­றால் என்னை கொன்று விடு­வார்­கள்," என்று பேசி­னார்.

காணொ­ளி­யின் உண்­மைத்­தன்­மையை இந்­தோ­னீ­சிய அதி­கா­ரி­கள் உறுதி செய்­துள்­ள­னர்.

இப்­பி­ரச்­சி­னைக்கு அமை­தி­யான முறை­யில் தீர்வு காண தங்­க­ளால் இயன்ற அனைத்­தை­யும் செய்­வ­தா­க­ நியூசிலாந்து சொன்­னது.