லண்டன்: பிரிட்டனில் பெண்களுக்கான சைக்கிளோட்டப் பிரிவுகளில் போட்டியிட திருநங்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நியாயமான போக்கைக் கட்டிக்காக்க இந்நடவடிக்கையை எடுப்பதாக பிரிட்டனில் சைக்கிளோட்டப் போட்டிகளை நிர்வகிக்கும் 'பிரிட்டிஷ் சைக்ளிங்' அமைப்பு தெரிவித்தது.
எனினும், திருநங்கைகள் 'ஓப்பன் கேட்டகரி' எனும் பொதுப் பிரிவில் போட்டியிடலாம். ஒன்பது மாதகால பரிசீலனைக்குப் பிறகு விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.
சைக்கிளோட்டிகள் உட்பட சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகள் கருத்தில்கொள்ளப்பட்டன. அத்துடன் இரு பிரிவினரின் செயல்திறன் குறித்த மருத்துவ ஆய்வு முடிவும் பரிசீலிக்கப்பட்டது.
புதிய கொள்கை இவ்வாண்டின் இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று 'பிரிட்டிஷ் சைக்ளிங்' அமைப்பு சொன்னது.

