சோல்: வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் அவசரகால கதவைத் திறந்த 30 வயது மதிக்கத்தக்க ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
விமானத்தில் சங்கடமாக இருந்தது என்றும் அதில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்பதற்காகவும் கதவை திறந்ததாக விசாரணையின்போது அந்த ஆடவர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். தமது வேலை பறிபோனதால் தாம் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
தென்கொரியாவைச் சேர்ந்த ஏஷியானா ஏர்லைன்ஸ் விமானம் அந்நாட்டின் ஜெஜூ தீவில் இருந்து டேகு நகருக்கு 194 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று பயணி ஒருவர் அவசரகால கதவைத் திறந்துவிட்டார்.
கதவு திறந்த நிலையில் விமானத்துக்குள் காற்று வேகமாக வீச ஆரம்பித்தது. இதனால், பயணிகள் நிலைதடுமாறி அச்சத்தில் உறைந்தனர். சிலர் மயக்கமடைந்து விழுந்தனர். சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக விமானம் டேகு விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
''விமானம் தரையிலிருந்து 213 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அவர் கதவைத் திறந்தார்.
"விமானச் சிப்பந்திகளால் கதவை மூட முடியவில்லை. நாங்கள் நிச்சயம் உயிர் பிழைக்க மாட்டோம் என்று நினைத்தோம்," என்று அதே விமானத்தில் பயணம் செய்த ஒருவர் சொன்
னார்.