சமையல் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் அபராதம்

சமையல் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் அபராதம்

1 mins read
40eccde7-41db-4dbb-83d4-c868fcfe323f
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் ஏழு எண்­ணெய் நிறு­வ­னங்­க­ளுக்கு 2.8 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் (3.8 மில்­லி­யன் வெள்ளி) அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சென்ற ஆண்டு சமை­யல் எண்­ணெய் பற்­றாக்­குறை நில­வி­ய­போது, அதி­க­ரித்து வந்த எண்­ணெய் விலை உயர்­வைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக இந்­தோ­னீ­சிய அர­சாங்­கம் சில்­லறை விற்­பனை விலைக்கு வரம்பை நிர்­ண­யித்­தது. அச்­ச­ம­யத்­தில் எண்­ணெய் விநி­யோ­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தி­ய­தாக கிட்­டத்­தட்ட 27 நிறு­வனங்­கள்­மீது குற்­றம் சாட்­டப்­பட்­டது.

விசா­ர­ணையை அடுத்து, முக்­கிய நிறு­வ­னங்­கள் உள்­ளிட்ட ஏழு நிறு­வனங்­க­ளுக்கு ஒரு பில்­லி­யன் ரூப்­பியா ($90,000 வெள்ளி) முதல் 40.9 பில்­லி­யன் ரூப்­பியா வரை அப­ரா­தம் செலுத்த உத்­த­ர­வி­டப்­பட்டுள்­ளது.