ஏபெக்: நிலையான வர்த்தகத்தை மேம்படுத்த இணக்கம்

1 mins read
f4537b0d-bcfd-44cf-82d2-fea54272ad79
-

டெட்­ராய்ட்: உலக நாடு­க­ளின் வர்த்­தக அமைச்­சர்­கள் கலந்­து­கொண்ட 'ஏபெக்' எனப்­படும் ஆசிய பசி­பிக் பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்­புக்­கான உச்ச நிலை மாநாட்­டில் அனைத்து நாடு­க­ளை­யும் ஈடு­ப­டுத்­திய, நிலை­யான வர்த்­த­கத்தை மேம்­ப­டுத்த ஒப்­புக்­கொள்­ளப்­பட்­டது.

ஆனால், உக்­ரேன் பிரச்­சினை தொடர்­பில் ர‌ஷ்யா, சீனா தெரி­வித்த ஆட்­சே­பணை கார­ண­மாக மாநாடு கூட்­ட­றிக்கை வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இந்த இரண்டு நாள் மாநாடு அமெ­ரிக்­கா­வின் டெட்­ராய்ட் நக­ரில் நடை­பெற்­றது. அமெ­ரிக்க வர்த்­தக பிர­தி­நிதி கேத்­ரின் மாநாட்டு அறிக்­கையை வெளி­யிட்­டார்.

சுதந்­தி­ர­மான, நியா­ய­மான, வெளிப்­ப­டை­யான, அனைத்து நாடு­க­ளை­யும் ஈடு­ப­டுத்­திய வர்த்­தக மற்­றும் முத­லீட்டு சூழலை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை மாநாட்­டில் கலந்து கொண்ட நாடு­கள் மறு­உ­றுதி செய்­வ­தாக அதில் கூறப்­பட்­டுள்­ளது. பரு­வ­நிலை மாற்­றத்­திற்கு எதி­ரான போராட்­டம் குறித்­தும் விவா­திக்­கப்­பட்­டது. நவம்­பர் மாதம் சான் பிரான்­சிஸ்­கோ­வில் நடை­பெ­ற­வுள்ள மாநாட்­டில் கூட்­டறிக்கை வெளியிடப்­படும் என்று நம்பு­வ­தாக கேத்­ரின் சொன்­னார்.