மக்கள் தப்புவதைத் தடுக்க வடகொரிய எல்லையில் சுவர்

மக்கள் தப்புவதைத் தடுக்க வடகொரிய எல்லையில் சுவர்

1 mins read
b740df42-7e54-43d5-b8cc-87bffd37c49f
-

சோல்: கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வல் காலத்­தின்­போது தனது எல்­லை­வழி மக்­கள் தப்­பி­யோ­டு­வ­தைத் தடுக்­கும் முயற்­சி­யில் இறங்­கி­யி­ருக்­கிறது வட­கொரியா.

வட­கொ­ரி­யத் தலை­வர் கிம் ஜோங் உன்­னின் அர­சாங்­கம் அந்­நாட்­டின் வடக்­குப் பகு­தி­யில் பெரிய சுவரை எழுப்­பி­யது. அதற்­கான பணி­கள் 2020ஆம் ஆண்டு தொடங்­கின.

சுவர் எழுப்­பப்­பட்­ட­தால் வட­கொ­ரி­யா­வுக்­கும் சீனா, ரஷ்யா ஆகிய நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான எல்லை மூடப்­பட்­டது. இப்­ப­கு­தி­வ­ழி­யாகத்தான் வட­கொ­ரி­யர்­கள் பொது­வாக வெளி­யு­ல­கி­லி­ருந்து தக­வல் பெற்று வந்­த­னர்.

மற்ற நாடு­க­ளின் நடப்பு விவ­கா­ரங்­கள் தொடர்­பி­லான தக­வல்­களை வட­கொ­ரி­யா­வில் பெறு­வது மிக­வும் சிர­ம­மான ஒன்று.

அதோடு, வட­கொ­ரி­யா­வில்­இருந்து தப்­பி­யோட எண்­ணு­ வோ­ருக்கு இந்த எல்­லைப் பகுதியே உகந்­த­தாக இருந்­தது.

2022ஆம் ஆண்­டில் 67 வட­கொ­ரி­யர்­கள் மட்­டுமே தென்­கொரி­யா­வுக்­குத் தப்­பி­யோ­டி­னர். 2019ஆம் அண்­டில் இந்த எண்­ணிக்கை 1,047ஆகப் பதி­வா­னது.