அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பை உயர்த்த இணக்கம்

அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பை உயர்த்த இணக்கம்

2 mins read
dfa333ee-5579-4a17-bc87-2c63f3de3029
-

வாஷிங்­டன்: பல வாரங்­க­ளாக நீடித்த பேச்­சு­வார்த்­தை­க­ளின் விளை­வாக, அமெ­ரிக்­கா­வின் கடன் உச்ச வரம்பை உயர்த்­து­வதற்கு ஜன­நா­யக, குடி­ய­ர­சுக் கட்­சி­கள் கொள்கை அள­வில் இணங்­கி­யுள்­ளன.

ஆயி­னும், அந்த உடன்­பாட்­டிற்கு அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றம் ஒப்­பு­தல் அளிக்க வேண்­டும்.

இந்த உடன்­பாட்­டை அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் 'சம­ர­சம்' எனக் குறிப்­பிட்­டார். மாறாக, நாடா­ளு­மன்ற நாய­கர் கெவின் மெக்­கார்த்தி, 'இதற்­கு­முன் இல்­லாத அள­விற்­குக் கடு­மை­யான செல­வுக் குறைப்பு நட­வ­டிக்கை' என்று தெரி­வித்­துள்ளார்.

முன்­ன­தாக, இவ்­வி­வ­கா­ரத்­தில் விரைந்து உடன்­பாடு எட்­டப்­ப­டா­வி­டில், வரும் ஜூன் 5ஆம் தேதிக்­குள் திருப்­பிச் செலுத்த வேண்­டிய கடன் தொகைக்­குப் போதிய பணம் இல்­லா­மல் போக­லாம் என்று அமெ­ரிக்க நிதி­ அமைச்சு எச்­ச­ரித்­தி­ருந்­தது.

வரி வரு­வா­யை­விட அதி­க­மாகச் செலவு செய்­வ­தால் அர­சாங்­கத்தை நடத்த அமெ­ரிக்கா கடன் வாங்க வேண்­டி­யுள்­ளது.

இப்­போது 31.4 டிரில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் (S$42.2 டிரில்­லி­யன்) என்ற அள­வில் இருக்­கும் கடன் உச்ச வரம்பை உயர்த்த வேண்­டு­மெ­னில், கல்வி, சமூ­க­நலத் திட்­டங்­கள் உள்­ளிட்­ட­வற்­றுக்­குச் செல­வி­டும் தொகை­யைக் குறைக்க வேண்­டும் என்று குடி­யு­ர­சுக் கட்சி வலி­யு­றுத்தி வரு­கிறது.

மாறாக, குறிப்­பிட்ட சில வரி­களை உயர்த்த ஜன­நா­ய­கக் கட்சி யோசனை தெரி­வித்­துள்­ளது.

கடன் உச்ச வரம்பு உயர்வு தொடர்­பான உடன்­பாடு குறித்த விவ­ரங்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

எனி­னும், அர­சாங்­கத்­தின் தற்­காப்பு சாராச் செல­வி­னங்­கள் அடுத்த ஈராண்­டு­களுக்கு உயர்த்­தப்­பட மாட்டா என்­றும் 2025ஆம் ஆண்டு முதல் 1% உயர்த்­தப்­படும் என்­றும் 'சிபி­எஸ்' செய்தி குறிப்­பிட்­டுள்­ளது.

அதே­வே­ளை­யில் 'மெடிக்­எய்ட்' சுகா­தா­ரக் காப்­பு­று­தி­யில் எந்த மாற்­ற­மும் இராது என்­றும் அச்­செய்தி கூறு­கிறது.

இந்த உடன்­பாடு தொடர்­பில் அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றத்­தில் நாளை மறுநாள் புதன்­கி­ழமை வாக்­கெடுப்பு இடம்­பெ­ற­வுள்ளது. அதற்­கு­முன், அதி­பர் பைட­னும் நாடா­ளு­மன்ற நாய­கர் மெக்­கார்த்­தி­யும் உடன்­பாடு தொடர்­பில் தங்­கள் கட்­சி­யி­ன­ரிடம் கருத்­திணக்­கத்தை ஏற்­ப­டுத்த முயல்­வர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.