அவசரகாலக் கதவு திறக்கப்பட்டதால் பயணச்சீட்டு விற்பனை நிறுத்தம்

அவசரகாலக் கதவு திறக்கப்பட்டதால் பயணச்சீட்டு விற்பனை நிறுத்தம்

1 mins read
efe2b827-6664-4c89-a8e1-f1b459aa0339
-

சோல்: தென்கொரியாவின் ஏஷியானா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த போது, அதன் அவசரகாலக் கதவைத் திறந்ததற்காக ஆடவர் ஒருவர் கைதானார். கடந்த வெள்ளிக்கிழமை ஜேஜு நகரிலிருந்து டேகு நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தபோது அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதனை அடுத்து, சில அவசரகால இருக்கைகளுக்கான பயணச்சீட்டு விற்பனையை நிறுத்திவைத்து இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. தனது 14 ஏ321-200 விமானங்களில் 26ஏ, 31ஏ என்ற இரு இருக்கைகளும் காலியாக வைக்கப்படும் என்று அந்த நிறுவனம் கூறி இருக்கிறது. கைதான ஆடவர் மீதான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்குப் பத்தாண்டுவரை சிறை விதிக்கப்படலாம்.