சனிக்கிழமைகளில் நெகிழிக்குத் தடை விதித்துள்ள மலேசிய நகரம்

சனிக்கிழமைகளில் நெகிழிக்குத் தடை விதித்துள்ள மலேசிய நகரம்

1 mins read
b920d5ad-a2c6-44f7-93ff-bb5c1779a4f0
-

ஈப்போ: 'நெகி­ழிப்பை வேண்­டாம்' எனும் விழிப்­பு­ணர்­வுப் பிர­சா­ரத்தை மலே­சி­யா­வின் ஈப்போ நகர மன்­றம் தொடங்­கி­யி­ருக்­கிறது.

அதன்­படி, வரும் ஜூன் 1ஆம் தேதி­ முதல் சனிக்­கி­ழ­மை­தோ­றும் கடை­களில் நெகி­ழிப்­பைக்கு 20 காசு கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­படும்.

சுற்­றுச்­சூ­ழ­லைக் காக்­கும் வித­மாக ஒரு­முறை மட்­டும் பயன்­படுத்­தக்­கூ­டிய நெகி­ழிப்பை பயன்­பாட்­டைக் குறைப்­பதே இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தின் இலக்கு என்று ஈப்போ மேயர் ருமைஸி பகா­ரின் குறிப்பிட்டார்.

இதன் தொடர்­பில் இம்­மா­தம் 18ஆம் தேதி ஈப்போ நகர மன்­றத்­தின் சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்­புப் பிரிவு 120 வணி­கர்­க­ளு­டன் கலந்­தா­லோ­சனை நடத்­தி­யது. அவர்­களில் 22 பேர் தங்­க­ளின் வணி­கப் பகு­தியை நெகி­ழிப்பை இல்லா இட­மா­கப் பதி­வு­செய்­து­கொண்­ட­னர்.

"இரு­பது காசு வாங்­கிக்­கொண்டு நெகி­ழிப்பை வழங்­கும் கடை­க­ளுக்கு 'நெகி­ழிப்பை இல்லா நாள் வளா­கம்' என்ற சான்­றி­த­ழும் நெகி­ழிப்பை வழங்­காத கடை­க­ளுக்கு 'நெகி­ழிப்பை இல்லா வளா­கம்' என்ற சான்­றி­த­ழும் வழங்­கப்­படும்," என்­றார் திரு ருமைஸி.

வரும் 2030ஆம் ஆண்­டிற்­குள் ஒற்­றைப் பயன்­பாட்டு நெகி­ழிப்­பையை முற்­றி­லு­மாக ஒழிக்க ஈப்போ நகர மன்­றம் இலக்கு கொண்­டுள்­ளது.

இந்த விழிப்­பு­ணர்­வுப் பிர­சா­ரம் வெற்­றி­க­ர­மாக நடை­மு­றை­யில் இருப்­பதை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில், எல்லா வணிக நிறு­வனங்­களும் நெகி­ழிப்பை தொடர்­பான தங்­க­ளது சான்­றி­தழை காட்­சிப்­ப­டுத்த வேண்­டும் என அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

நெகி­ழிப்­பைக் கட்­ட­ணம் மூலம் சேரும் தொகை ஈப்போ நகர மன்­றத்­தி­டம் வழங்­கப்­படும். பள்ளி மாண­வர்­கள் மற்­றும் பொது­மக்­க­ளுக்­கான சுற்­றுச்­சூழல் பாது­காப்­புத் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­த­வும் மறு­சு­ழற்சி குறித்த விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் அத்­தொகை பயன்­ப­டுத்­தப்­படும்.