54 ஆளில்லா வானூர்திகளை அனுப்பிய ரஷ்யா

54 ஆளில்லா வானூர்திகளை அனுப்பிய ரஷ்யா

1 mins read
96da8df3-f6a0-4e6a-94ea-a0877b0c6442
-

கியவ்: உக்­ரே­னு­ட­னான சண்டை தொடங்­கி­ய­தி­லி­ருந்து இல்­லாத வகை­யில், அந்­நாட்­டின்­மீது தாக்­கு­தல் தொடுப்­ப­தற்­காக ரஷ்யா நேற்று முன்­தி­னம் இரவு 54 ஆளில்லா வானூர்­தி­களை அனுப்­பி­ய­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

ஆயி­னும், கிட்­டத்­தட்ட அவை அனைத்­தை­யும் சுட்டு வீழ்த்தி விட்­ட­தாக உக்­ரேன் ராணுவ அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

அவற்­றில் 40 வானூர்­தி­கள் தலை­ந­கர் கியவ்­வைக் குறி­வைத்­த­தா­கக் கூறப்­பட்­டது. இத்­தாக்­கு­த­லில் இரு­வர் கொல்­லப்­பட்­ட­னர்; மூவர் காயம் அடைந்­த­னர்.

ஒரே நேரத்­தில் பல திசை­க­ளி­லி­ருந்­தும் ஆளில்லா வானூர்­தி­கள் வந்­தன என்­றும் கியவ் நகர மேயர் விட்­டலி கிலிட்ஸ்கோ கூறி­னார்.

இம்­மா­தத்­தில் ஆளில்லா வானுர்­தி­மூ­லம் கியவ்­மீது ரஷ்யா தாக்­கு­தல் நடத்­தி­யி­ருப்­பது இது 14வது முறை. உக்­ரே­னின் ராணுவ நிலை­க­ளை­யும் முக்­கிய உள்கட்­ட­மைப்பு­க­ளை­யும் ரஷ்யா குறி­வைத்­த­தா­கக் கூறப்­பட்­டது.

இத­னி­டையே, ரஷ்யா மேலும் பல ஆளில்லா வானூர்­தி­களை அனுப்­பக்கூடும் என்பதால் கியவ் நக­ர­வா­சி­கள் பாது­காப்­பாக இருக்­கும்­படி அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­னர்.