மாஸ்கோ: பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்ஸாண்டர் லூகாஷென்கோ (படத்தில் வலது) மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்தார். அதற்குப் பிறகு அவருடைய உடல்நிலை மோசமடைந்தது என்றும் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் பெலாரஸ் நாட்டின் எதிர்த் தரப்புத் தலைவர் கூறினார்.
புட்டினுடன் நடந்த பிரத்தியேக கூட்டத்திற்குப் பிறகு அதிபர் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக வேலரி செப்காலோ என்ற அந்தத் தலைவர் தெரிவித்தார்.
என்றாலும் இதன் தொடர்பில் மேல் தகவல்கள் தேவைப்படுவதாகவும் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

