சொந்த விண்வெளி நிலையத்திற்கு மூன்று வீரர்களை சீனா இன்று அனுப்புகிறது

சொந்த விண்வெளி நிலையத்திற்கு மூன்று வீரர்களை சீனா இன்று அனுப்புகிறது

1 mins read
547e6651-cdfc-4863-9718-973ec41dd45d
-
multi-img1 of 2

கான்சூ: சீனா விண்­வெ­ளி­யில் டியாங்­காங் என்ற தனது சொந்த விண்­வெளி நிலை­யத்தை அண்மையில் கட்டி முடித்­தது.

அந்த நிலை­யத்­தின் முதல் கட்­டத்­தைத் தொடங்­கும் வகை­யில் முதல்முறை­யாக விண்­வெளி வீரர்களை அந்த நிலை­யத்­திற்கு சீனா இன்று அனுப்­பு­கிறது.

பெய்­ஜிங்­கில் செயல்­படும் பெய்­ஹாங் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பேரா­சி­ரி­யர் கூய் ஹாய்ச்சோ என்ற விண்­வெளி வீரர்­தான் சீனா­வில் ஆக­அ­திக அனு­ப­வம் மிக்­க­வர்.

பழுத்த அனு­ப­வம் வாய்ந்த விண்­வெளி வீரர்­க­ளான மேஜர் ஜென­ரல் ஜிங் ஹாய்­பிங், கர்னல் சூ யாங்சூ ஆகி­யோரும் அவருடன் செல்­வர். இந்த மூவரும் முதன்­மு­த­லாக விண்­வெளிக்­குச் செல்­கி­றார்கள். அந்தக் குழு­வுக்கு மேஜர் ஜெனரல் ஜிங் தலைமை வகிப்­பார்.

மூன்று வீரர்­களும் 'தெய்­வீ­கக் கலம்' என்ற ஷெங்சூ-16 விண்­கலத்­தில் செல்­வர்.

அந்­தக் கலம் இன்று காலை 9.31 மணிக்கு வட­மேற்கு சீனா­வில் இருக்­கும் ஜுயூ­சு­வான் துணைக்­கோள நிலை­யத்­தில் இருந்து புறப்­படும்.

அந்த விண்­க­லம், விண்­வெளி­யில் சீனா அமைத்­துள்ள நிலை­யத்­து­டன் சேரும். விண்­க­லத்­தில் இருக்­கும் வீரர்­கள் அந்த விண்­வெளி நிலை­யத்­திற்­குச் சென்று அதன் உள்ளே 180 நாள்­கள் வசிப்­பார்­கள் என்று மதிப்­பி­டப்­பட்டு இருக்­கிறது.