பிரேசிலின் அட்லாண்டிக் காட்டுப் பகுதியில் வாழ்கின்ற மரத் தவளைகள் பற்றி அந்த நாட்டின் கேம்பினாஸ் பல்கலைக்கழகத்தின் இருவாழ்வி விலங்குகள் (நீர், நிலம் வாழும்) ஆய்வுக்கூடத் தலைவர் டாக்டர் லூயிஸ் பிலிப் டோலி டோவும் அவரின் குழுவினரும் 2020ல் ஆய்வு நடத்தினர்.
பழ மரத்தில் பூக்களில் இருக்கும் திரவத்தைக் குடிக்கச் செல்லும் தவளைகள் (படம்: கார்லஸ் ஹென்ரிக் டி-ஒவிவெரா- நோகூரியா) பூக்களில் இருக்கக்கூடிய மகரந்தங்களைத் தோளில் சுமந்து அவற்றை வேறு பூக்களில் சேர்த்து மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன என்பதை அவர்கள் கண்டு பிடித்தனர்.
அந்தத் தவளைகளே மகரந்தக் கடத்திகளாகத் தெரிந்த முதலாவது இருவாழ்விகளாக இருக்கக்கூடும் என்று ஆய்வு கூறுகிறது.